search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புது ரக பட்டாசுகள்"

    புது ரக பட்டாசுகளை வெடிக்க தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் அதே பட்டாசுகளை புதுவை சட்டசபை வளாகத்தில் வெடித்துக்காட்டினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீபத்தில் பள்ளி மாணவர்களிடையே ஒரு பட்டாசு புழக்கத்தில் வந்துள்ளது.

    ரூ.10க்கு தீப்பெட்டி அளவில் 50-க்கும் மேற்பட்ட சிறு சிறு பால்ரஸ் வடிவத்தில் பட்டாசுகள் உள்ளது. இதை தரையில் ஓங்கி அடித்தால் சிறிய சத்தத்துடன் வெடிக்கிறது.

    இதை மாணவர்கள் வாங்கி வைத்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் அடித்து ஆபத்தாக விளையாடுகின்றனர். இது தனியாக வெடிக்கும்போது சிறு சத்தத்தையே ஏற்படுத்துகிறது.

    ஆனால், மொத்தமாக வெடித்தால் உடலில் காயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. பட்டாசின் பெட்டியில் இந்திய தயாரிப்பு என குறிப்பிட்டுள்ளனர்.

    ஆனால், இது சீன பட்டாசாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீன பட்டாசு விற்பனைக்கு தடை உள்ளது. இந்நிலையில் இன்று புதுவை சட்டசபை வளாகத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் இந்த பட்டாசுகளுன் வந்தனர்.

    அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் ஆபத்தான பட்டாசு குறித்து தெரிவித்து அதை சட்டசபை நுழைவு வாயிலில் எறிந்து வெடித்து காட்டினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    புதுவையில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களிடம் இந்த பட்டாசு பிரபலமாகியுள்ளது. இதை மாணவர்கள் வாங்கி விளையாட்டாக எரிந்து விளையாடி வருகின்றனர். தங்கள் பையில் பள்ளிக்கு எடுத்துச்சென்று எறிந்து விளையாடி வருகின்றனர்.

    சில சமயத்தில் ஒருவர் மீது ஒருவர் பட்டாசு வீசுகின்றனர். ஒட்டுமொத்தமாக பட்டாசு வெடித்தால் மாணவர்களுக்கு பெரும் காயத்தை ஏற்படுத்தும். மனரீதியாக மாணவர்களிடம் வன்முறை கலாச்சாரத்திற்கு இது ஊக்குவிக்கிறது.

    எனவே,. கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பட்டாசை தடை செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தின் அருகில் இந்த பட்டாசு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×